Search This Blog n

22 November 2012

இலங்கை அரசாங்கம் அடிமைச் சேவகம் செய்து வருகிறது

       
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இலங்கை அரசாங்கம் அடிமைச் சேவகம் செய்து வருவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இந்தியாவும் மௌனமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் பொருளாதார பாதுகாப்பு உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது அடிவருடிகளைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வினை தடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்து வருவதாக விக்ரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தை வழங்குவதாக ஜனாதிபதி சர்வதேச சமூகத்திற்க வாக்களித்த போதிலும் அந்த வாக்குறுதிகளை உதாசீனம் செய்ய முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்ட யோசனையில் இலங்கை அரசாங்கம் மக்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் வழங்கவில்லை எனவும்

0 கருத்துகள்:

Post a Comment