By.Rajah.அதிபர் ஒபாமா, தேர்தலில்
தனது வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும்
கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தொண்டர்களாகிய உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என கூறியவாறே கண் களங்கினார். இதனால் கூடியிருந்த தொண்டர்கள் ஒபாமாவின் பேச்சைக் கேட்டு நெகிழ்ச்சி அடைந்தனர் |
0 கருத்துகள்:
Post a Comment