புதுச்சேரியில் மரணப்படுக்கையில் உள்ள தாயாருக்காக ஒரு சிறுநீரகத்தை தானம் செய்ய மகனுக்கு சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி வழங்க வேண்டுமென உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த 53 வயது வாணி என்ற பெண்மணி சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மரணப்படுக்கையில் உள்ள அவருக்கு நெருங்கிய உறவினர்கள் ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தால் பிழைக்க வாய்ப்புள்ளதாக
மருத்துவர்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்து அவருடைய மகன் செந்தில்குமார் தனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார். அதற்கு மருத்துவ அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட தனியார்
மருத்துவமனை, இதுதொடர்பாக உடல், உறுப்பு மாற்று அ
றுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் ஒப்புதலை கோரியது. அந்த ஒப்புதல் குழு, சம்பந்தப்பட்ட நபரின் மனைவி ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவரது சிறுநீரகத்தை தானம் செய்ய முடியும்
எனக்கூறி மறுத்தது.
இதையடுத்து செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் ‘மரணப்படுக்கையில் உள்ள எனது தாயாரைக் காப்பாற்ற உடனடியாக எனது சீறுநீரகத்தை தானம் செய்ய
வேண்டியுள்ளது.
தற்போது நான் மனைவியை பிரிந்து வாழ்கிறேன். ஆனால் மனைவியுடன் வாழ்கிறேன் எனக் கூறினால்தான் எனது சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பார்கள் என நினைத்து
மனைவியுடன் வாழ்வதாக தெரிவித்தேன். தற்போது மனைவியின் ஒப்புதல் கோருகின்றனர். அது நடக்காத காரியம் என்பதால் எனது சிறுநீரகத்தை தாயாருக்கு தானம் செய்ய அனுமதியளிக்க சம்பந்தப்பட்ட குழுவுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்தது. அப்போது நீதிபதி உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
அதைப் பார்த்த
கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன் என்றார்.
அதையடுத்து நீதிபதி ‘இந்த வழக்கில் உடல் உறுப்பு மாற்று
அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழு, மனுதாரரிடம்
புதிதாக வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் அவரது சிறுநீரகத்தை தாயாருக்கு தானமாக அளிக்க அனுமதியளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். நீதிபதி கண்ணீர் விட்டு அழுததால், சிறிதுநேரம் நீதிமன்ற வளாகம் அமைதியானது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
Post a Comment