Search This Blog n

05 February 2016

தமிழக மீனவரின் பார்வை இலங்கை கடற்படையின் தாக்குதலில் பறிபோனதாக குற்றச்சாட்டு

இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கியதில் இந்தியாவின் தமிழ்நாட்டின் ஜெகதாபட்டினம் மீனவரின் கண் பார்வை பறிபோனதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் முகமது மன்சூர்(36). மீன் பிடிக்கும் போது, இலங்கை கடற்படை யினர் தாக்கியதில் கண்ணில் பலத்த காயத்துடன் மதுரைஅர் விந்த் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
 இதுகுறித்து 
முகமது மன்சூர் கூறியது: கடந்த புதன் கிழமை விசைப்படகில் மீன்பிடிக்க 3 பேர் சென்றோம். நான் படகை ஓட்டினேன். இரவு 7 மணியளவில் அப்பகுதிக்கு இலங்கை கடற் படையினர் வந்தனர். நாங்கள் 
தாக்கப்படலாம் 
எனக் கருதி திரும்ப முயன்றோம். நாங்கள் படகை வேகமாக இயக்கியதால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கற்களை வீசித் தாக்கினர். இதில் என் இடது கண்மீது கல் பலமாக பட்டது. ரத்தம் வழிய, கடும் வலியுடன் படகை கரைக்கு இரவு 11 மணியளவில் கொண்டு வந்தேன்.
மணமேல்குடி மருத்துவமனை யில் முதலுதவி சிகிச்சை பெற்றேன். கண்பார்வை மோசமானதால் மதுரைக்கு வந்தோம். இடது கண்ணில் பார்வை முழுமையாக போய்விட்டது என்றார்.
சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அர்விந்த் கூறும்போது, ‘அவரது இடது கண் பார்வை முழுமையாகப் பறிபோய்விட்டது. கருவிழியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு கண்ணுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு சிகிச்சை அளித்து வருகிறோம்’ என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment