யாழ். மாவட்டத்தில் இந்திய வர்த்தகத்தினை மேம்படுத்துவதற்கான விஷேட மாநாடு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர்கள் 44 பேர் யாழிற்கு வருகை தந்துள்ளனர். ‘யாழில் வியாபாரத்தினை மேம்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில், இந்த மாநாடு நடைபெற்று வருகின்றது.
இந்த மாநாட்டில், இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் அ.நடராஜா, பிரதி தூதுவர் எம். தர்சணாமூர்த்தி மற்றும் யாழ். மாவட்ட வர்த்தக தொழில்த்துறை மன்ற தலைவர் என். விக்னேஷ் மற்றும் வர்த்தகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
வியாபாரத்தின் மூலம் 1000 கோடி ரூபா பொருளாதாரத்தினை எட்டி வர்த்தகத்தினை முன்னேற்றும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment