‘நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’, என்றும் நடிகர் விஷால் கூறினார்.
கடுமையாக உழைத்தோம்
நடிகர் சங்க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் நேற்று மாலை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்
வருமாறு:–
கேள்வி:– நடிகர் சங்க தேர்தல் வெற்றியை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
பதில்:– மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைத்தோம். எங்கள் அணி மீது நம்பிக்கை வைத்து,
வெற்றி பெற
செய்த அனைத்து நடிகர்–நடிகைகளுக்கும், நாடக நடிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்போது நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நான் நின்று கொண்டிருப்பது, எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. இந்த மண் தான்
எங்கள் விலாசம்.
கேள்வி:– நடிகர் சங்க கட்டிடம் கட்ட என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?
பதில்:– நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காகத்தான் போராடினோம். அதற்காகவே இந்த பொறுப்புக்கும் வந்தோம். எங்கள் பணிகளை தொடங்கிவிட்டோம். மறுபடியும், இங்கு கட்டிடம் வரும்.
வணிக வளாகங்கள் தேவையில்லை
கேள்வி:– நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு உள்ளதே?
பதில்:– நடிகர் சங்க இடத்தை குத்தகைக்கு விட்டதில், எங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று வற்புறுத்தினோம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இங்கு வணிக வளாகங்கள் தேவையில்லை.
கேள்வி:– பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற உங்களின் முதல் நடவடிக்கை என்ன?
பதில்:– நலிந்த நாடக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே எங்களின் முதல் நோக்கம். அவர்களை பொருளாதார ரீதியாக உயர்வடைய செய்வோம். அதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும். நடிகர்–நடிகைகள் பற்றிய முழுமையான புள்ளி விவரங்கள் தெரியாமல்
உள்ளது. எனவே
ஒவ்வொரு நடிகர்–நடிகைகள் பற்றிய விவரங்கள் சேகரித்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்களின் உருவங்கள், வயது, வருமானம், பெற்றோர், குழந்தைகள் உள்பட அனைத்து தகவல்களும் அதில் இருக்கும். தேவையானவர்களுக்கு இதன்மூலம் உதவிகள் செய்து தரப்படும்.
ஒற்றுமையாக செயல்படுவோம்
கேள்வி:– நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவீர்களா?
பதில்:– எல்லா நடிகர்களும் ஒற்றுமையாக செயல்படுவோம். தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் அளித்தோம். அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 29 நிர்வாகிகளும் பாடுபடுவோம்.
இவ்வாறு விஷால் பதிலளித்தார்.
பெயர் மாற்றம்?
நடிகர் சங்க தலைவராக தேர்வான நடிகர் நாசர் கூறுகையில், ‘‘எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நாடக நடிகர்கள் நலனுக்காக பாடுபடுவோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றவேண்டும் என வற்புறுத்தப்படுகிறது. இப்போதுதான், பொறுப்புக்கு வந்துள்ளோம். பெயர் மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்போம்’
’, என்றார்.
பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் கார்த்தி பேசுகையில், ‘‘தேர்தலில் வெற்றிபெற்ற எங்களுக்கு எல்லாருடைய ஆசீர்வாதமும் இருக்கிறது. அனைத்து உறுப்பினர் நலனுக்காக பாடுபடுவோம்’’
, என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment