இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இந்திய மீனவர்கள் 11 பேரும் 3 படகுகளில்
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த 11 இந்திய மீனவர்களையும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம்
ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இன்று மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
தற்போது குறித்த மீனவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின் மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த மீனவர்கள் ஆஜர் படுத்தவுள்ளதாக கடற்தொழில் திணைக்க உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.மெராண்டா தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment