தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்ட பயணத்தை கோவையில் நேற்றுக்காலை தொடங்கினார். முன்னதாக ரேஸ்கோர்ஸ் நடைபயிற்சி பாதையில் காலை 6.30 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்டார். சுமார் 2½ கிலோ மீட்டர் தூரமுள்ள நடைபயிற்சி பாதையில் நடந்து சென்ற அவருடன் நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் கைகுலுக்கினார்கள். அவர்கள் மு.க.ஸ்டாலினுடன் செல்போனில் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.
கிராபிக்ஸ்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின்போது இளைஞர்களிடம் எழுச்சியை பார்க்க முடி கிறது. ஒவ்வொரு கட்சியினரும் மக்களை நேரில் சென்று சந்திப்பது அவர்களது விருப்பம். நான் ஆட்டோ டிரைவரை தாக்கியதாக திட்டமிட்டே பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது. ஏற்கனவே நான் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தபோது கூட்ட நெரிசல் காரணமாக கட்சியினரை விலகி இருக்க சொன்னதை நான் ஒரு வாலிபரை அடித்தது போன்று சித்தரித்து பொய் பிரசாரம் செய்தனர்.
தற்போதும் அதே போல ஆட்டோ டிரைவரை தாக்கியதாக கிராபிக்ஸ் செய்து பரப்புகிறார்கள். இதை பற்றி நான் கவலைப்படவில்லை. வைகோ மேடைகளில் என்னைப்பற்றி அவதூறாக பேசுவது பற்றி நான் கவலைப்படவும் இல்லை. அதை பொருட்படுத்துவதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்
0 கருத்துகள்:
Post a Comment