மும்பை தொடர் குண்டு வெடிப்பு தீவிரவாதி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகளில் அபுசலீம் என்பவனும் ஒருவன்.வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் கடத்தி செல்ல உதவிய இவன் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற பிறகு,
மும்பை நிழல் உலக தாதாவாக மாறினான்.அபுசலீம் மீது 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள இந்தி படத் தயாரிப்பாளர்களை மிரட்டி இவன் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தான். ந்த நிலையில்
மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக சி.பி.ஐ. தேடியதால் இவன் நடிகை மோனிகா பேடியுடன் வெளிநாட்டுக்கு சென்று விட்டான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்த இவனை துபாய் போலீசார் பிடித்தனர். இதைத்தொடர்ந்து 2005-ம் ஆண்டு அபுசலீமை துபாய் அரசு
இந்தியாவிடம் ஒப்படைத்தது.
மும்பை கொண்டு வரப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட அபுசலீம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகள் மீது வசாரணை நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக
அவன் ஜெயிலில் இருந்தபடி இந்த வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறான்.இந்த நிலையில் 1995-ம் ஆண்டு மும்பையில் பிரபல கட்டிட காண்டிராக்டர் பிரதீப் ஜெயின் படுகொலை செய்யப்பட்ட வழக்கு
விசாரணை முடிவுக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று மும்பை தடா கோர்ட்டு தீர்ப் பளித்தது.
அபுசலீமுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதன் மூலம் மும்பை ஜெயிலில் அபுசீலம் வாழ்நாள் முழுக்க இருக்கப் போவது உறுதியாகி உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment