அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் பாடியா சுபுரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கார்மெல்சிங் கபூர் என்ற ராணுவ வீரர் குடிபோதையில் கவுதம் போரா என்பவர் வீட்டுக்கு சென்றார். கவுதம் போரா வீட்டிலேயே மது விற்பவர் என்று தெரிகிறது. அதற்கு அவருக்கு அனுமதி இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஏற்கனவே போதையில் இருந்த கார்மெல்சிங், கவுதமிடம் மது கேட்டார்.
அவர் மது இல்லை என்று மறுத்ததால் கார்மெல்சிங் துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டார். இதில் கவுதம்
போரா மற்றும் பாபு போரா ஆகியோர் துப்பாக்கி குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே இறந்தனர். கவுதம் மனைவி ஜினு என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை போலீசார் ராணுவ வீரர் கார்மெல்சிங் கபூரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 கருத்துகள்:
Post a Comment