டெல்லியில் 49 நாட்கள் ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி அதன் பிறகு பொறுப்புகளை விட்டு ஓடிவிட்டது. இன்னொரு முறை ஆட்சியமைக்கும் தகுதி அந்த கட்சிக்கு கிடையாது என மத்திய மந்திரி உமாபாரதி பரபரப்பாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுபற்றி ராஜேந்திர நகர் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:-
வாக்காளர்களே, ஆம் ஆத்மிக்கு கருணையை மட்டுமே காட்டுங்கள்! வாக்குகளை கொடுத்து விடாதீர்கள். அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலுக்குள் வருவதற்காக மகாபுருஷரான அன்னா ஹசாரேவை கூட பயன்படுத்திக்கொண்டவர். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அவரையே மறந்துவிட்டார் கெஜ்ரிவால். சரியான நேரத்தில்
ஆம் ஆத்மியை விட்டு விலகியிருக்கிறார் கிரண்பேடி. அவரை பா.ஜ.க.வுக்கு வரவேற்கிறேன். கிரண்பேடி அரசியல் விளையாட்டுக்குள் சிக்காமல்
தப்பியிருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள். பா.ஜ.க மக்களிடத்தில் கிரண்பேடியை புரொஜக்ட் செய்வது
ஒரு சரியான முடிவு. நான் கூட கிரண்பேடியின் ரசிகைதான். பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு இந்தியன் என்ற பெருமையை உணர வைத்திருக்கிறார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஒருவர் கூட இந்தியர்கள் யாருக்கும் பயன்படாதவர்கள் என்று நினைப்பதில்லை.
0 கருத்துகள்:
Post a Comment