மும்பை:மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,மாநிலத்தில் வேளாண் உற்பத்தி அதிகரித்திருப்பதாகவும், முக்கிய துறைகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் பெருமிதம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுகையில்,அரசின் செயல்பாட்டை மதிப்பிட 100 நாள்கள் என்பது மிகவும் குறைவாகும். இதில் எங்கள் நோக்கத்தை மட்டுமே நீங்கள் மதிப்பிட முடியும். நாங்கள் சரியான வழியில் செல்வதாக தெரிவித்தார்.
மாநிலத்தில் வறட்சியால் 24,000 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இதில் 90 லட்சம் பேருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக சூரியமின்சக்தியில் இயங்கும் பம்ப்செட்டுகளை
அளிக்கும் திட்டத்தை விரைவில் கொண்டுவர உள்ளோம். வேளாண் துறையில் நிரந்தரமாகவும், தொடர்ச்சியாகவும் முதலீட்டை அதிகப்படுத்த விரும்புகிறோம். மாநிலத்தில் தற்போது முதலீட்டுக்கு சாதகமான சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தார்.
முதலீடுகள் அதிகரிப்பு:தொழில் நிறுவனங்களுக்கான நில ஒதுக்கீடு, பல்வேறு அனுமதிகள் வழங்குவது முடுக்கிவிடப்பட்டு்ள்ளது. எங்களது இந்த முதல்கட்ட நடவடிக்கையால் மாநிலத்துக்கு முதலீடுகள் அதிகரிக்கும். இதனால், வேலைவாய்ப்புகள் உருவாகும்.மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில், 50 சதவீதம் பேர் 25 வயதுக்கும் கீழ் உள்ளவர்களாவர். அதிக முதலீடுகளால் இளைஞர்களின் திறன் மேம்படும்.இது பொருளாதார நிலையை மேம்பட செய்யும். ஊரக, நகர்ப்புறங்களில் உள்ள உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்ய, வரி விதிப்பில் இருந்து நிதி திரட்டப்படும்.மாநிலத்தில் வேளாண் வளர்ச்சி கடந்த 2 ஆண்டுகளாக மந்தமாக இருந்த நிலையில்,
வேளாண் துறையின் வளர்ச்சிக்கும், உற்பத்தியை மேம்படுத்தவும் முயற்சி செய்து வருகிறோம்.
மாநிலத்தில் மின்உற்பத்தி 50 சதவீத அளவிலேயே உள்ளது. மின்உற்பத்தியை அதிகரிக்க, தடையின்றி நிலக்கரி விநியோகம் செய்யப்பட வேண்டும்.அடுத்த மாதம் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் முதலீட்டுக்கான மூலதனச் செலவை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment