மருத்துவர்கள் சந்தேகம்! கேரள மாநிலம் கொச்சி வந்த வெளிநாட்டு சிறுவனுக்கு எபோலா தாக்கியிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பல ஆயிரம் பேர் எபோலா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்
.மேலும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் எபோலாவின் தாக்கம் எதிரொலித்து பல பேர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் எபோலா நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும்
பயணிகளை சோதனை செய்ய விமான நிலையங்களிலேயே எபோலா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நெடும்பாசேரி விமான நிலையத்திலும் எபோலா நோய் கண்காணிப்பு
மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடல் நோய் சம்பந்தமான சிகிச்சைக்காக கொச்சி வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு எபோலா நோய் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. அபோது
அவனுக்கு எபோலா நோய் தாக்குதல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவன் உடனடியாக எர்ணா குளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
அங்கு அவன் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலும்
சிறுவனிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரி எபோலா சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரத்தப் பரிசோதனை முடிவில் சிறுவனுக்கு எபோலா தாக்கியுள்ளதா? என்பது குறித்து தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment