இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. என்ற அரசியல் இயக்கம் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் உள்ள இருளை அகற்றுவதற்காகத்தான் தே.மு.தி.க.வின் புரட்சி தீபம் தாங்கிய மூவர்ணக்கொடி உருவாக்கப்பட்டது. கட்சி கொடி உருவாகி, 15 ஆண்டுகளை கடந்து தமிழக மக்களின் மனதில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளது. பல சிறப்புகளை பெற்ற கட்சி கொடிநாளை
சிறப்பாக கொண்டாட வேண்டும் என தே.மு.தி.க. நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
சாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ஒரு புதிய அரசியலை தமிழ்நாட்டுக்கு தந்து வருகிறோம். நாம் ஓடி ஓடி உழைத்து, நம் சொந்த பணத்தில் மக்கள் நலப்பணிகளை செய்து, மக்கள் மனதில் தே.மு.தி.க.வுக்கு என தனி இடத்தை பெற்றுள்ளோம்.
பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள நம் இயக்கத்தின் கொடிநாளை சிறப்பாக கடைபிடிக்கும் வண்ணம் 12-2-2015 வியாழக்கிழமை (நாளை) தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் கட்சி கொடியேற்று விழா நிகழ்ச்சிகளை அனைவரும் சிறப்பாக நடத்த வேண்டும்.
கட்சி கொடியினை ஏற்றி வைத்தும், இனிப்புகள் வழங்கியும், ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நல உதவிகள் வழங்கியும், பொதுமக்களின் பேராதரவோடு கொடி நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
மேலும், கட்சி கொடி மரங்கள் இல்லாத கிராமங்களே இல்லை, தெருக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி, தே.மு.தி.க.வின் புரட்சி தீப மூவர்ணக்கொடி பட்டொளி வீசி, தமிழகம் எங்கும் பறந்திட அனைவரும் பாடுபட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்
0 கருத்துகள்:
Post a Comment