புளியங்குடி அருகே நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நடந்த விபத்தில் மாணவர் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தப்புரம் அரசுக் கல்லூரியில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் கொல்லம் கடக்கல் சார்ந்த முகுந்தன் மகன் நந்து, மலப்புரம் மாவட்டம் அப்ப்துல்லாஹ் மகன் அன்வர், லத்தீப் மகன் சைபுல்லாஹ், கோழிக்கோடு சோலையூர் குட்டி மகன் மிதுன் ஆகிய 4 பேரும் கடந்த 8ம் தேதி யாருக்கும் தெரியாமல் கொடைக்கானல் சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு காரில்திரும்பினர். காரை மிதுன் ஓட்டியுள்ளார். நள்ளிரவு 2 மணியளவில் கார் வாசுதேவநல்லூர் சிந்தாமணி அருகே வரும் போது நிலை தடுமாறி சாலை ஓரத்திலிருந்த புளிய மரத்தில் மோதியது.
இதில் 4பேரும் காயம் அடைந்தனர். நந்து மட்டும் பலத்த காயம் அடைந்த நிலையில் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார். மற்ற 3 பேரும் நெல்லை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவீர சிகிச்சை அழைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வாசு தேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment