பிரதமர் மோடி – சிறிசேனா சந்திப்பு: இலங்கை தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான புதிய வழி உருவாகும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனோ இந்தியாவிற்கு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு இந்திய இலங்கை உறவில் திருப்பம் ஏற்படும்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான புதிய வழி உருவாகும். தமிழக மீனவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க முடியும். இலங்கை தமிழர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைக்க பாஜக துணையாக இருக்கும் என்றார்.
மேலும், இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இலங்கை தமிழர் பிரச்சனை மற்றும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர் பிரச்சனை நிரந்தர தீர்வுக்கு வரும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை இலங்கை அதிபரின் வருகை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment