சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ-க்கள் பேரவை விவாதத்தின் போது தங்களது செல்போன்களில் ஆபாசப்படங்களை பார்ப்பது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அண்மையில், கர்நாடக மாநிலம் பெல்காவியில் நடந்த சட்டசபைக் கூட்டத்தில் கரும்பு விலை நிர்ணயம் குறித்து
சீரியஸாக விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் 'வாட்ஸ் ஆப்'-லிருந்து டவுண்லோடு செய்த சில படங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அதே கூட்டத்தில் அவுரத் தொகுதி
எம்.எல்.ஏ பிரபு சவான் பிரியங்கா காந்தியின் படத்தை பார்த்துக் கொண்டிருந்ததும் வீடியோவில் பதிவாகியிருந்தது. அதே நாளில், மற்றொரு கட்சியை சேர்ந்த யூ.பி.பனாகர் என்ற ஹயர்கெருர் தொகுதி எம்.எல்.ஏ தனது மொபைலில் 'கேண்டி க்ரஷ் சாகா' கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்த வீடியோ இண்டர்நெட்டில் காட்டுத்தீ போல பரவியது. தகவலறிந்த சபாநாயகர் கோகடு திம்மப்பா சட்டசபைக்குள்
செல்போன்களை கொண்டு வர தடை விதித்தார். இதையடுத்து, சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ-க்கள் செல்போன்களை வெளியில் அதற்கென வைக்கப்பட்டுள்ள வுட்டன் லாக்கரில் வைத்துவிட்டு வர உத்தரவிடப்பட்டது.
அதற்கு டோக்கனும் வழங்கப்படுகிறது. செல்போன்களை பாதுகாக்க ஒரு காவலாளியும் லாக்கருக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, கடந்த 2012-ல் பா.ஜ.க. மந்திரிகளாக இருந்த லக்ஷ்மன் சவாடி, கிருஷ்ணா பலேமர், சிசி பாட்டீல் ஆகியோர் சட்டசபையில் ஆபாச படம் பார்த்து சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment