பட்ஜெட் முற்போக்கு பார்வை கொண்டது என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
முதல் ரெயில்வே பட்ஜெட்
மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்துள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசு, தனது முதலாவது முழுமையான ரெயில்வே பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது.
இது ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவுக்கும் முதல் பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
மோடி பாராட்டு
இந்த நிலையில், ரெயில்வே பட்ஜெட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
2015 ரெயில்வே பட்ஜெட் முற்போக்கு பார்வை கொண்டது. எதிர்காலத்தையும், பயணிகளையும் மையமாகக் கொண்டது.
சாதிப்பதற்கான தெளிவான கண்ணோட்டத்தையும், உறுதியான திட்டத்தையும் கொண்டது.
இந்திய ரெயில்வேயில் தொழில் நுட்ப மேம்பாடு, நவீனமயம் ஆகியவற்றுக்கு முதல் முறையாக தெளிவான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியுள்ள பட்ஜெட் இது என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
எல்லாமே உள்ளது
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரெயில்வே பட்ஜெட், இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக ரெயில்வேயை ஆக்குவதற்கான தெளிவான வரைவுத் திட்டங்களை கொண்டிருக்கிறது. இது நாட்டின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்காற்றும்.
ரெயில்வே பட்ஜெட்டில் சாமானிய மக்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேகம், அளவுகோல், சேவை, பாதுகாப்பு என எல்லாமும் உள்ளது.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment