அகமதாபாத்தின் சந்த்கேடா பகுதியில் உள்ளது கேந்திரிய வித்யாலயா பள்ளி. இந்த் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவதேசஷ் குமார் ஆசிரியர்களுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை பள்ளிக்கூட வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். அப்போது பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் அறையிலும் சுத்தம் செய்தனர். அப்போது
அங்கு உள்ள பாதுகாப்பு பெட்டிகளையும் சுத்தம் செய்யுமாறு தலைமை ஆசிரியர் ஊழியர்களிடம் கூறினார். ஆனால் 5-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பெட்டிகளுக்கு சாவிகள் இல்லை பல இடங்களில் தேடிபார்த்தும் சாவிகள் கிடைக்கவில்லை. உடனடியாக தலைமை ஆசிரியர் ஊழியர்களைஅந்த பெட்டியை உடைக்கும்படி கூறினார் ஊழியர்கள் அந்த பெட்டிகளை உடைத்தனர்.
அப்போது ஒரு பெட்டியில் ஒரு பேக் இருந்தது அதில் கட்டுகட்டாக பணம் இருந்தது. மற்றோரு பெட்டியில் கட்டிகட்டியாக தங்க கட்டிகள் கண்டு எடுக்கப்பட்டது. ஆனால் அந்த பணமும் தங்க கட்டிகளுக்கும் யாரும் உரிமை கொண்டாட வில்லை. இது குறித்து தலைமை ஆசிரியர் குமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பணத்தையும் தங்க கட்டிகளையும் கைப்பற்றினர். பணம் ஒரு கோடி இருந்து உள்ளது. தங்க கட்டிகள் 100 கிராம் கட்டிகளாக மொத்தம் 21 கட்டிகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 59 லட்சமாகும்.
பாதுகாப்பு பெட்டிகளை ஆசிரியர்களும் ஊழியர்களும் மாறி மாறி பயனபடுத்தி வந்து உள்ளனர். யார் இந்த பணத்தையும் தங்க கட்டிகளையும் வைத்தார்கள் என தெரியவில்லை.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து தலைமை ஆசிரியர் குமார் கூறும் போது... நான் இந்த பள்ளிக்கு பணிக்கு வந்து 2 வருடங்கள் ஆகிறது அந்த காலத்திற்குள் இந்த பாதுகாப்பு பெட்டியை யாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை. நாங்கள் ஆசிரியர்களிடமும் ஊழியர்களிடமும் விசாரித்து விட்டோம் ஆனால் இதில் பணம் மற்றும் தங்க கட்டிகள் நிரம்பிய பேக்கை யார் வைத்தார்கள் என தெரியவில்லை.இது குறித்து வருமான வரிதுறையினருக்கும் தகவல் கொடுக்கபட்டு உள்ளது. என தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment