சிங்கப்பூரில் பிரதமர் அலுவலகம், தேர்தல் துறை, பி.ஏ.பி. கட்சி உள்பட 7 அமைப்புகளின் கம்ப்யூட்டர்கள் முடக்கப்பட்டன. அவற்றின் இணைய தளங்கள், பொய்யான தகவல்கள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றால் உருக்குலைக்கப்பட்டன. பிரபல பத்திரிகையின் இணைய தளமும் தப்பவில்லை.
7 அமைப்புகளின் கம்ப்யூட்டர்கள் முடக்கத்தாலும், இணைய தளங்களை உருக்குலைத்ததாலும் மக்களிடையே பதற்றமும், அச்சமும் ஏற்பட்டது.இந்த இணையதள வழி குற்றங்கள், சிங்கப்பூர் போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்தது. அவர்கள் 2,465 மணி நேரம் செலவழித்து நடத்திய விசாரணையில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஜேம்ஸ்ராஜ் ஆரோக்கியசாமி (வயது 36) என்பவர் சிக்கினார்.
இவர்தான், அரசின் பல்வேறு துறை கம்ப்யூட்டர் சர்வர்களை அதிநவீன சாப்ட்வேர்களை பயன்படுத்தி, ஸ்கேன் செய்து, முடக்கியது அம்பலத்துக்கு வந்ததுஇது தொடர்பாக சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது தன்மீதான குற்றச்சாட்டுகளை ஜேம்ஸ்ராஜ் ஆரோக்கியசாமி ஒப்புக்கொண்டார்.
கம்ப்யூட்டர்களை முடக்கியதும், இணைய தளங்களை உருக்குலைத்ததும், மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தத்தான் என தெரிய வந்தது.விசாரணை முடிவில் அவருக்கு 56 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜெனிபர் மேரி தீர்ப்பு அளித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment