ஜம்மு காஷ்மீரில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தாக்-கண்ட் கிராமத்தில்
தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் ராணுவம் கிராமத்தை சுற்றி வளைத்தது. அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டது.
ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டபோது, தீவிரவாதிகள அவர்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு ராணுவமும், தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
தொடர்ந்து ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்திருக்கும் தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவத்தில் நிகழ்ந்த சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.
0 கருத்துகள்:
Post a Comment