70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்று பல்வேறு ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதில் சில ஆம் ஆத்மிக்கு சாதகமாகவும், வேறு சில கருத்து கணிப்புகள் பா.ஜனதாவுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் டெல்லி வாக்காளர்களிடம் ஆம் ஆத்மி கட்சி கட்சியும் தனிப்பட்ட முறையில் கருத்து கணிப்பு நடத்தியது.
அதன் முடிவுகளை நேற்று வெளியிட்ட கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் கூறியதாவது:–
53 சதவீதம் பேர் முதல்–மந்திரியாக மீண்டும் கெஜ்ரிவால் வருவதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். கிரண்பேடிக்கு 24 சதவீத ஆதரவே கிடைத்தது. ஓட்டு சதவீதத்தில் ஆம் ஆத்மிக்கு 46, பா.ஜனதாவுக்கு 33,
காங்கிரசுக்கு 11, மற்றவர்களுக்கு 10 சதவீதம் கிடைத்தது. அதே நேரம் ஓட்டு சதவீதத்தை சீட்டுகளாக மாற்றினால் ஆம் ஆத்மி 51, பா.ஜனதா 15, காங்கிரஸ் 4 இடங்களை கைப்பற்றும்.
0 கருத்துகள்:
Post a Comment