விருகம்பாக்கத்தில் குடும்பத்தகராறில் போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ்காரர்
விருகம்பாக்கம், அபுசாலி தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தங்கராஜ் வடபழனி போலீஸ் நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்தியவாணி
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. விருகம்பாக்கத்தில் தங்கராஜூம், அவரது மனைவியும் மட்டும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல தங்கராஜ் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சத்தியவாணி மட்டும் தனியாக இருந்தார்.
தற்கொலை
வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த தங்கராஜ் கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவிலலை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு சத்தியவாணி தூக்குப்போட்டு இறந்தநிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சத்தியவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் மனம் உடைந்த சத்தியவாணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
0 கருத்துகள்:
Post a Comment