பெண்ணை படம் பிடித்தார்: துபாயில், 23 வயதான இந்திய வாலிபருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் பி.ஜே. என்று மட்டும் வெளியிடப்பட்டது. விற்பனை பிரதிநிதியாக பணிபுரியும் அவர், கடந்த ஆகஸ்டு மாதம், அரசு அலுவலகம் ஒன்றுக்கு சென்றார்.
அங்கு பணிபுரியும் 32 வயதான பெண் உள்அலங்கார நிபுணர் ஒருவர், ஓய்வறையில் ஆடை மாற்றிய காட்சியை அவர் செல்போனில் வீடியோ படம் எடுத்தார்.
அதுதொடர்பான புகாரின்பேரில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தன் மீது கருணை காட்டுமாறு வேண்டினார்இந்நிலையில், அவருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதித்ததுடன், தண்டனை காலம் முடிந்த பிறகு இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப துபாய் கோர்ட்டு உத்தரவிட்டது.
0 கருத்துகள்:
Post a Comment