அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த மாதம் இந்தியா வந்த போது, பிரதமர் மோடி அணிந்திருந்த, அவரது பெயர் பொறிக்கப்பட்ட ‘பந்த்கலா’ சூட் சூரத் நகரில் ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இதுபற்றி நேற்று ஆமதாபாத் நகரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல், அந்த ஏலம் பற்றியும், மோடியின் உடையை ஏலத்தில் எடுத்தவர் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்–மந்திரியுமான மம்தா பானர்ஜியின் ஓவியங்கள் ரூ.1 கோடியே 80 லட்சத்துக்கு ஏலம் போனது பற்றி மோடி கேள்வி எழுப்பி அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரியதாகவும், அது மோடி உடை ஏலத்தில் விற்கப்பட்டதற்கும் பொருந்தும் என்றும் அப்போது அவர் கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment