உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு கூட்டத்தினருடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர், ‘‘நாட்டின் புதிய கல்வி வரைவுக்கொள்கை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படும். கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கும், மாணவர்கள் சிறப்பான உயர் கல்வியைப் பெறவும் தேவையான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என கூறினார்.
மேலும், கல்வித்திட்டத்தை காவிமயமாக்க முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘கல்வியில் அரசியலுக்கு இடமில்லை’’ என கூறினார்.
‘‘நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை. ஆராய்ச்சிப்பணிக்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை கட்டுப்படுத்த இங்குள்ள கல்வி நிறுவனங்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கின்றன’’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
Post a Comment