பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து குடியரசில் உள்ள பல சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மாட்டிறைச்சி பர்கர்களில் குதிரை மாமிசம் கலந்திருப்பது குறித்து உணவுத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பல நிறுவனங்கள் இந்த இரு நாடுகளுக்கும் மாட்டிறைச்சி என்று விற்ற உணவுப் பொருட்களில், குதிரை மற்றும் பன்றி இறைச்சியின் கூறுகள் இருந்ததாக அயர்லாந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
குதிரை இறைச்சி உண்பதால் உடல் நலத்துக்கு கேடு எதுவும் விளையாது, ஆனால் பிரிட்டிஷ் தீவுகளில் இதை உண்பது குறித்து ஒரு கலாசார ரீதியான அருவருப்பு நிலவுகிறது.
பிரிட்டனின் முன்னோடி சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்றான டெஸ்கோவினால் விற்கப்பட்ட பர்கர் ஒன்றில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு குதிரை மாமிசம் இருந்ததாக சோதனைகளில் கண்டறியப்பட்ட பின்னர், அதன் வாடிக்கையாளர்களிடம் அது மன்னிப்பு கோரியிருக்கிறது
0 கருத்துகள்:
Post a Comment