பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் தொடர்புடைய ஊழல் விவகாரத்தை விசாரித்துவந்த போலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இஸ்லாமாபாத்தில், அவர் தங்கியிருந்த அரச விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் போலிஸ் அதிகாரி கம்ரான் ஃபய்சலின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டில் நீர் மற்றும் சக்தி வளத்துறை அமைச்சராக இருந்தபோது தற்போதைய பிரதமர் அஷ்ரப் பெருமளவு இலஞ்சம் வாங்கியுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஆனால் பிரதமர் அந்தக் குற்றச்சாட்டினை மறுக்கிறார். கம்ரான் உண்மையில் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று காவல்துறை கூறுகிறது.
பாகிஸ்தானில் செல்வாக்கு மிக்க மதபோதகர் ஒருவரின் தலைமையில் மக்களின் அரச எதிர்ப்பு போராட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையிலேயே பிரதமரைக் கைதுசெய்வதற்கான நீதிமன்றத்தின் உத்தரவும் வந்தது.
பிரதமரை உடனடியாகக் கைதுசெய்யக்கூடிய சாத்தியங்கள் இல்லை என்ற போதிலும் பாகிஸ்தானில் அரசியல் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment