ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் உயிருக்கு போராடிய தந்தையை மிட்டாய் கொடுத்து 6 வயது சிறுமி காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் லண்டனில் நடந்தது.
இங்கிலாந்தின் பர்மிஹ்காம் நகரை சேர்ந்த டேவ் பிட்ஸ்பாட்ரிக்(41) என்பவர் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் கீழே விழுந்தார். இதனையடுத்து தனது தந்தை கோமாவில் விழுந்ததாக அவரது மகள் லில்லி எண்ணியுள்ளார்.
பின்னர், அருகிலிருந்த சிறப்பு குளுக்கோஸ் ஜெல்லை தனது தந்தையின் நாடியில் தடவியுள்ளார். அப்போதும் தனது தந்தையிடமிருந்து எந்தவித அசைவும் இல்லாததால் ஜெல்லி மிட்டாயை தனது தந்தையின் வாயில் வைத்துள்ளார்.
இதனையடுத்து டேவுக்கு சற்று நினைவு திரும்பியது. இதன் பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றியதாக லண்டனிலிருந்து வெளிவரும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர் பிழைத்துள்ள டேவ் பிட்ஸ்பாட்ரிக் கூறுகையில், எனது மகள் இல்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க முடியாது. அவள் லிட்டில் ஹூரோ என கூறினார். மருத்துவராக வேண்டும் என்பது லில்லியின் கனவு.
0 கருத்துகள்:
Post a Comment