சிரியாவில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று சுவிட்சர்லாந்து முறையீட்டு மனு ஒன்றை ஐநா பாதுகாப்புக் குழுவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
இந்த மனுவில் 52 நாடுகளின் ஒப்புதலும் இடம்பெறும், என்று சுவிஸ் வெளியுறவுத்துறை டிடியர் அமைச்சர் புர்கால்ட்டர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் அளித்த பேட்டியில், சிரியாவில் பல கொடூரமான போர்க்குற்றங்கள் நடைபெற்றுள்ளன, அவற்றைச் செய்தவர்களைத் தண்டிக்காமல் விடக்கூடாது என்றார்.
நாங்கள் பல நாடுகள் இணைந்து எங்களின் வேண்டுகோள் கடிதத்தில் ஐநாவிற்கு அனுப்புவோம்.
எங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவதா மறுப்பதா என்பதை ஐநா பாதுகாப்புக்குழு முடிவு செய்யட்டும் என்று புர்கால்ட்டர் தெரிவித்தார்.
இருபத்திரண்டு மாதங்களாக நடந்துவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை அறுபதினாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
ஆறு லட்சம் பேர் வீடிழந்து நாடிழந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இவற்றிற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுவிஸ் அரசு கேட்டுக்கொண்டது,{புகைபடங்கள்}
0 கருத்துகள்:
Post a Comment