பாகிஸ்தானில் ஆப்கான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வசீரிஸ்தான், தலீபான் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இந்தப்பகுதியில் அமெரிக்க உளவுவிமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தி தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று வசீரிஸ்தானில், பாபர் பெஹாரி என்ற இடத்தில் பதுங்கியிருந்த தலீபான் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க உளவுவிமானம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது 16 தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாகவும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த தீவிரவாதிகள் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் என கூறப்படுகிறது.இப்படி அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானில் தாக்குதல்கள் நடத்தி வருவது அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா கடந்த 2009–ம் ஆண்டு பதவி ஏற்றபிறகுதான் உளவு விமானங்களை கொண்டு தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
Post a Comment