சின்னஞ் சிறிய இளம் சிறுமிகளை ‘பாபி’ பொம்மைகள் கவர்ந்து இழுக்கின்றன. இதன் விற்பனை உலக அளவில் சக்கைபோடு போடுகிறது. தற்போது சிறுமிகள் மட்டுமின்றி இளம்பெண்களையும் கவருகிற வகையில் அமெரிக்காவில் வாஷிங்டனில் வசிக்கும் பீயன் ஷானினே(32) என்ற பெண் விதவிதமான பொம்மைகள் உருவாக்கி வருகிறார்.
இந்த பொம்மைகள் பார்வைக்கு தத்ரூப குழந்தைகள் போலவே காட்சி தருகின்றன. இதன் விலையை கேட்டால் தான் நம்மவர்களுக்கு சற்று தலைசுற்றல் வரும். இந்த பொம்மை ஒன்றுக்கு ரூ.75 ஆயிரம்(1,500 டாலர் அல்லது 930 பவுண்ட்) என நிர்ணயித்து விற்பனை செய்கிறார்.
இந்த வகை பொம்மைகளை பிரபல பாடகர்களின் மனைவிகள், குழந்தைகள் வாங்கி வைத்துள்ளனர். உலக அளவில் ஆர்டர்கள் குவிகிறது என ஷானினே கூறுகிறார். கூர்மையான மிரட்டும் சிவப்பு கண்கள், பிசாசு பற்கள் என தங்களுக்கு பிடித்தமான வடிவில் ஆர்டர் செய்து பெறுகிறார்கள்.
4 குழந்தைகளின் தாயான ஷானினே மேலும் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஒரு பொம்மையை செய்து தோழிக்கு அன்பளிப்பாக கொடுத்தேன். அதை அவர் கனடாவுக்கு எடுத்து சென்றார். இதை பார்த்து அசந்து போன பலர் என்னுடன் தொடர்பு கொண்டு பொம்மை கேட்டார்கள். இதுவே என்னை இந்த தொழிலில் ஈடுபட தூண்டி விட்டது. குறிப்பாக குழந்தை இல்லாத பெண்கள் இந்த பொம்மைகளை விரும்பி வாங்குகிறார்கள்’ என்கிறார்
0 கருத்துகள்:
Post a Comment