அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை கற்பழித்த காட்சியை கைத்தொலைபேசி மூலம் படம் பிடித்து மிரட்டிய 5 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த நவம்பர் மாதம், வயல்வெளி வழியாக நடந்து வந்துக்கொண்டிருந்த என்னை, பிரதீப், பாரு, கோலியா ஆகியோர் வழிமறித்து கத்தி முனையில் கற்பழித்தனர்.
அந்த காட்சியை கைத் தொலைபேசியில் ஒருவன் படம் பிடித்தான். சில நாட்களுக்கு பிறகு அந்த காட்சியை காட்டி மிரட்டிய குல்தீப் என்பவனும் பலவந்தமாக என்னை கற்பழித்தான்.
சில நாட்களுக்குப் பிறகு மங்கே ராம் என்பவனுடன் என் வீட்டுக்கு யாருமில்லாத நேரத்தில் வந்த குல்தீப், அவனுடன் சேர்ந்து என்னை மீண்டும் கற்பழித்தான். இவர்கள் 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாணவி கூறியிருந்தார்.
மருத்துவ பரிசோதனையில் குறித்த மாணவி பலமுறை கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment