ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கடைத்தெரு ஒன்றில் ஒரு நபரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்யும் காட்சிகள் கடந்த டிசம்பர் மாதம் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
லட்சக்கணக்கான மக்கள் இந்த காட்சியைக் கண்டு திகைப்படைந்தனர். இதே காட்சியை செய்தியாக அந்நாட்டின் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது.
இந்த வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்ய ஈரான் அரசு உத்தரவிட்டது. அவர்கள் மீது விரைவு விசாரணை நடத்தப்பட்டது
இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேருக்கு மரண தண்டனையும், மேலும் இருவருக்கு தலா 74 சவுக்கடியும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட 24 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்களும், பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் வானொலி செய்தி வெளியிட்டது.
சுமார் 300 பேர் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அச்செய்தி தெரிவித்தது.{ (வீடியோ இணைப்பு)}
0 கருத்துகள்:
Post a Comment