அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கடிவாளம் போட புதிய சட்டத்தினை அதிபர் ஒபாமா கொண்டுவந்தார். அதற்கான சட்டவரைவு அறமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் துப்பாக்கி கலச்சாரம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே துப்பாக்கிச்சூடும் உயிர்பலியும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இது அரசு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி நியூடவுணில் உள்ள சாண்டி ஹூக் பள்ளி ஒன்றில்நடந்து துப்பாக்கிச்சூட்டில் 20-ம் மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர். இதற்கு ஒபாமா கண்டனம் தெரிவித்தார்.முன்னதாக அமெரிக்காவில் குருதுவராவில் உள்ள சீக்கிய கோயில், கொலராடோ உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் பலர் பலியாகினர். இதற்கு முடிவு கட்ட அதிபர் ஒபாமா துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தினை கொண்டு வரப்படும் என்றார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜாய்கெர்னி கூறுகையி்ல், துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் இனி எதிர்காலத்தில் உயிரிழப்புகளை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி நியூடவுண் நகரில் உள்ள சாண்டிஹூக் பள்ளி குழந்தைகள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன் ஒபாமாவிற்கு கோரிக்கை அடங்கிய கடிதத்தினை அளித்தனர். இதனை ஏற்று ஒபாமா, நாட்டின் துப்பாக்கி பயன்பாடு குறித்து ஆராய துணை அதிபர் ஜோபைடன் தலைமையில் குழு அமைத்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நாட்டில் இனி துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.புதிய சட்டத்தின் படி பயங்கர ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் பின்னணி குறித்தும், எந்த காரணத்திற்காக வைத்துள்ளார்கள் என்பதும்,துப்பாக்கி வாங்குபவர்கள், விற்பவர்கள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும். ஒபாமாவின் இந்த புதிய சட்டத்திற்கு பெரும்பாலான அமெரிக்கர்கள் வரவேற்றுள்ளனர்
0 கருத்துகள்:
Post a Comment