பாகிஸ்தானில், ஷியா பிரிவு முஸ்லிம்கள், 98 பேர், கொல்லப்பட்டதை தொடர்ந்து, பலுசிஸ்தான் மாகாண அரசு, டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானின், பலுசிஸ்தானில் உள்ள குவெட்டாவில், கடந்த வாரம், இரண்டு குண்டுகள் வெடித்ததில், 98 பேர் பலியாயினர்.
120 பேர் படுகாயம் அடைந்தனர்.பலியானவர்கள் அனைவரும், ஷியா பிரிவை சேர்ந்தவர்கள், என்பதால், சன்னி பிரிவு முஸ்லிம்கள் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறி, இறந்தவர்களின் உடலை புதைக்க, உறவினர்கள் மறுத்து விட்டனர்.பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் அஷ்ரப், குவெட்டாவுக்கு சென்று, ஷியா பிரிவு தலைவர்களுடன் பேச்சு நடத்தினார்.
ஷியா பிரிவு முஸ்லிம்களை பாதுகாக்க தவறிய, பலுசிஸ்தான் மாகாண அரசை, பிரதமர் அஷ்ரப் நேற்று கலைத்தார். அங்கு தற்போது, கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment