இந்திய இராணுவ தினத்தை இன்று கொண்டாட இந்திய இராணுவம் தீர்மானித்துள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி 15ம் திகதி இந்திய இராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று கொண்டாடப்படும் 65வது இராணுவ தினத்தில் இந்திய இராணுவத்தின் சார்பில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் நினைவாக இந்தியா கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
இராணுவ அணிவகுப்புக்கள், இராணுவ சாகசங்கள் ஆகியவற்றுடன் இராணுவத்தின் தொழில்நுட்பங்கள், சாதனைகள் குறித்தும் நிகழ்ச்சிகளும் டெல்லி கன்டோன்மன்ட் பகுதியில் நடைபெற உள்ளது.
இந்தியா எல்லைப் பிரச்னைகள் தொடர்பாக சீனாவுடன் ஒரு தடவையும் பாகிஸ்தானுடன் இரண்டு தடவைகளும் போரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
Post a Comment