Search This Blog n

06 January 2013

மரணித்த மாணவிக்கு ஆதரவாக போராட்டம் நடத்த முடிவு

 
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி, மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் எதிரொலியாக லண்டனில் சில அமைப்புகள், கற்பழிப்புக்கெதிராக போராட்டங்கள் நடத்த தி்ட்டமிட்டுள்ளன.
அடுத்த சில வாரங்களில் போராட்டங்கள் நடத்தப்படும் என இன்னும் சில அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேற்கு லண்டனில் உள்ள சிறுபாண்மை பெண்கள் உரிமைகள் அமைப்பு, இந்திய உயர் வாரியத்திற்க்கு முன் போராட்‌டம் நடத்த உள்ளதாகவும் இரு தினங்களில் இப்போராட்டம் ‌தொடங்கும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

Post a Comment