ஜார்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில மாற்று அரசு அமைக்க எந்த கட்சியும் முன் வராததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கு ஜார்கண்ட மாநில ஆளுநர் சையத் அகமது அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதுபற்றி மத்திய அமைச்சரவை இன்று கூடி விவாதிக்க உள்ளது. இந்த கூட்டத்தில் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டால் கடந்த 3 ஆண்டுகளில் 3வது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும்
0 கருத்துகள்:
Post a Comment