உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் குத்தியதில் 37 பேர் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த 2 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 20 பேர் காயம் அடைந்தனர். ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 50 பேர் காயம் அடைந்தனர். இங்கும் எந்தவித உயிர் பலியும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 400க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்கப்பட்டன.
முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் மருத்துவமனை பரிசோதனை செய்யப்பட்டது. இதைபோல் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் பின்னரே ஜல்லிக்கட்டு போட்டி விளையாடி அனுமதி வழங்கப்பட்டது.
முதலில் கோயில் காளைகள் ஒவ்வொன்றாக விடப்பட்டது. பின்னர் படிப்படியாக மற்ற காளைகள் அவிழ்த்துவிட்டப்பட்டன. ஒவ்வொன்றாக விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தது.
சீறி வரும் காளைகளை வீரர்கள் அடக்கி முயன்றனர். இதில் பல காளைகள் வீரர்களை சமாளித்து பிடிபடாமல் ஓட்டம் பிடித்தது. பல வீரர்கள் காளைகளை அடங்கி பரிசுப் பொருட்களை தட்டிச் சென்றனர்
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 37 பேர் காயம் அடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியிலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த போட்டிகள் பிற்பகல் 2 மணியுடன் முடிவடைந்தது
அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுவை தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் எந்தவித உயிர் சேதமின்றி அமைதியாக நடந்து முடிந்ததால் மாவட்ட நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது
0 கருத்துகள்:
Post a Comment