புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 5 குற்றவாளிகள் சிறையிலும், 18 வயதை அடையாதவன் என்பதால் 6வது குற்றவாளி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டுள்ளான்.
6வது குற்றவாளி சிறுவன் தானா? என்பதை உறுதிப்படுத்த, அவன் படித்த ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர் இன்று இளம் சிறார் குற்றவாளிகளுக்கான நீதிபதியின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார்.
இந்நிலையில் படவுன் மாவட்டம் பவானிபூரில் வசிக்கும் 6வது குற்றவாளியின் தாயார் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு 6 குழந்தைகள், எனது மூத்த மகன் 11 வயதில் வேலை தேடி டெல்லிக்கு போனான்.
ஆரம்பத்தில் சில மாதம் 600 ரூபாய் பணம் அனுப்பினான். 3 வருடங்களாக அவனிடம் இருந்து பணமும் வரவில்லை. அவனைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.
அவன் உயிருடன் இருக்க மாட்டான் என்று தான் நாங்கள் நினைத்தோம்.
ஆனால், திடீரென்று டெல்லி பொலிசார் எங்கள் கிராமத்துக்கு வந்து அவனைப் பற்றி விசாரித்தபோது திகைத்துப் போனோம்.
அதிலும், அவன் செய்த குற்றம் பற்றி அறிந்த பின் அவமானத்தால் தலைகுனிந்து வாழும் நிலைக்கு எங்கள் குடும்பம் ஆளாகியுள்ளது.
அவன் செய்த தவறுக்கான தண்டனையை அவன் அனுபவித்தே தீர வேண்டும் என அவர் கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment