இந்தியா-இலங்கை நாடுகளிடையேயான கூட்டு கூட்டம் வரும் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் புதுடில்லியில் நடைபெற உள்ளது.
இந்தியா-இலங்கை இடையேயான 8-வது கூட்டு கூட்டத்தில் இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் தலைமையிலான குழு நாளை திங்கட்கிழமை இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அவரது வருகையின் போது இரு நாடுகளிடையோன வர்த்தகம், மீனவர் பிரச்னை இலங்கையில் செயல்பட்டு வரும் இந்திய ரயில்வே திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இலங்கை அரசியல் அமைப்பில் இலங்கை தமிழ் அமைப்புகளு்க்கான அதிகாரப்பகிர்வு குறித்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. கடந்த 2010-ம் ஆண்டில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற 7-வது கூட்டு கூட்டத்தி்ல் அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா கலந்து கொண்டார். அந்நிகழ்வின்போது யாழ்பாணப்பகுதியில் இந்திய தூதரகத்தை திறந்து வைத்தார்
0 கருத்துகள்:
Post a Comment