பெண்கள் பாதுகாப்பு கருதி இரவுப் பணிக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று உத்தரகான்ட் முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. |
உத்தரகான்ட் முதல்வர் விஜய் பகுகுணா, பெண்கள் வேலைக்கு செல்வது வரவேற்கத்தக்க
விடயம்தான். ஆனால் பாதுகாப்பு விடயத்தில் பெண்கள் சமரசம் செய்து கொள்ளக்
கூடாது. அதே சமயம் இரவுப்பணி என்று சொல்லப்படும் நைட் ஷிப்ட் பணிகளை பெண்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தங்கள் விருப்பப்படியான பணிகளுக்கு நேரங்களை தெரிவுசெய்து வேலை பார்ப்பதிலும் பெண்கள் அக்கறை காண்பிக்க வேண்டும். பெரும்பாலும் இரவுப் பணிகளை தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளார். இதற்கு இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாஜக, இது பழமைவாதிகளின் பேச்சாக இருக்கிறது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய சட்டம் ஒழுங்கை சரிசெய்வதை விடுத்து இது போன்ற அறிவுரைகள் சொல்வது, பெண்களை பழங்காலத்து கட்டுப்பெட்டிகள் ஆக்குவது போன்ற உள்ளது என்று தெரிவித்துள்ளது. டெல்லி மாணவி சம்பவம் உட்பட அனைத்து பாலியல் சம்பவங்களிலுமே பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குறை சொல்வது என்பது மிகவும் கவலை அளிக்கும் செயலாக உள்ளது என்றும் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் உசேன் கூறியுள்ளார். |
0 கருத்துகள்:
Post a Comment