இந்தியா, பறந்து கொண்டிருக்கும் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களை ஐரோப்பாவின் ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து வாங்க முடிவு செய்துள்ளது. |
கடந்த 50 ஆண்டுகளாக ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்து வந்த இந்தியா, சற்று
விலகி ஐரோப்பாவை நாடியுள்ளது. ரஷ்யாவிடம் உள்ள இலூசின்-78 ரக பறக்கும் டேங்கர்களை விட தொழில்நுட்பத்தில் ஏர் பஸ்ஸின் 330 MRTT பறக்கும் டேங்கர்கள் சிறந்தவை என தகவல் வெளியாகியிருக்கிறது. பறக்கும் டேங்கரின் விபரம் போர்க் காலத்தில் ஒரு போர் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது அதை தரையிறக்காமலேயே அதற்கு எரிபொருள் நிரப்ப உதவுபவை தான் இந்த டேங்கர்கள். கொள்முதலின் அவசியம் வானிலேயே இந்த இரு விமானங்களும் அருகருகே பறந்து, டேங்கரில் இருந்து பைப்பை போர் விமானத்தின் டேங்கில் இணைத்து எரிபொருளை நிரப்ப முடியும். போர்க் காலங்களில் வெடிகுண்டுகள், ஏவுகணைகளை எடுத்துக் கொண்டு எதிரி நாட்டை நோக்கி அல்லது எதிரி நாட்டுக்குள் இந்த விமானங்கள் பறக்கையில், எரிபொருள் நிரப்புவதற்காக மீண்டும் நீண்ட தூரம் திரும்பி வர வேண்டும். இதனால் இந்த விமானங்களின் தாக்குதல் நேரம் வீணாகும். இதைத் தவிர்க்கவே நடுவானில் வைத்தே டேங்கர்களைக் கொண்டு எரிபொருள் நிரப்பப்படுகிறது. எந்த ஒரு விமானமும் டேக்-ஆப் செய்யும்போது அதன் எடை அதன் என்ஜின் திறனுக்கு உட்பட்டு ஒரு அளவுக்குள் தான் இருக்க வேண்டும். ஒரு போர் விமானம் மிக அதிகமான ஆயுதங்களுடன் டேக்-ஆப் செய்யும்போது அதன் எடை மிக மிக அதிகமாக இருக்கும். இதனால் எடையைக் குறைக்க எரிபொருளின் அளவு குறைக்கப்படுகிறது. அல்லது நீண்ட தூரம் சென்று தாக்கும் விமானமாக இருந்தால் அதிக அதிக எரிபொருளை நிரப்பிவிட்டு அதில் இணைக்கப்படும் வெடிகுண்டுகள், ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதனால் அந்த விமானத்தின் முழுத் திறனை பயன்படுத்த முடிவதில்லை. இதைத் தவிர்க்க அதிக ஏவுகணைகள், வெடிகுண்டுகளுடன் அதே நேரத்தில் குறைந்த எரிபொருளுடன் போர் விமானத்தை டேக் ஆப் செய்ய வைத்துவிட்டு, பின்னர் உடனடியாக வானில் வைத்தே அதற்குத் தேவையான எரிபொருளை நிரப்பவும் இந்த டேங்கர்கள் உதவுகின்றன. போர் விமானங்களுக்கு மட்டுமல்ல, வீரர்களை ஏற்றிச் செல்லும் ராணுவத்தின் மிகப் பெரிய சரக்கு விமானங்களுக்கும் கூட இந்த டேங்கர்களைக் கொண்டு எரிபொருள் நிரப்ப முடியும். எரிபொருளை குறைவாக வைத்துக் கொண்டு, அதிக வீரர்களை ஏற்றிக் கொண்டு டேக் ஆப் செய்துவிட்டு, பின்னர் வானில் வைத்து எரிபொருள் போட்டுக் கொண்டு பறக்கலாம். இதற்கும் இந்த டேங்கர் விமானங்கள் உதவுகின்றன |
0 கருத்துகள்:
Post a Comment