ஒடிஷா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில், மருத்துவமனையில் வைத்து கணவருக்கு முன்னால் மனைவியைக் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த ஒருவர், மயூர்பஞ்ச் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை சந்தித்து நலம் விசாரிக்க அவரது தங்கை, தனது கணவருடன் நேற்றுமுன் தினம் மாலை மருத்துவமனைக்கு சென்றார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது அண்ணனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவர், வீட்டுக்கு புறப்பட்டார்.
மருத்துவமனை வாசலில் நின்றிருந்த சிலர் அந்த பெண்ணை கேலி செய்தனர். இதை தட்டிக்கேட்ட அவரது கணவரை அந்த கும்பல் அடித்து உதைத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் கட்டிப்போட்டது.
அவரை விடுவிக்க போராடிய அந்த இளம்பெண்ணை 6 பேர் மாறி, மாறி கணவரின் கண் முன்னரே கதறக் கதற கற்பழித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அந்த பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், குந்தன் முகி (33), ரகு பிஸ்வால் (19), கோபி முகி (19) பலராம் முகி (27), சிபாராம் கடேயி (20), சந்தன் முகி (20) ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்
0 கருத்துகள்:
Post a Comment