கனடாவில் ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், இளம்பெண் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்ததாக 13 வயது மாணவன் ஒருவன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Peterborough Lakefield Community காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று நமது செய்தியாளருக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஒண்டோரியோ பள்ளி ஒன்றில் மாலை 3.10 மணிக்கு பெண் அலுவலர் ஒருவர் தனியாக வகுப்பறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த 13 வயது மாணவன் ஒருவன், பெண் அலுவலரின் ஆடையை களைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டான். அலுவரின் புகாரின் பேரில், பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது. காவல்துறையில் விரைந்து சென்று, பள்ளி மாணவனை கைது செய்தனர்.
பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பள்ளியின் பெயரை தெரிவிக்க காவல்துறை அதிகாரி மறுத்துவிட்டார். மேலும் 13 வயது மாணவன் என்பதால், சிறுவர் கிரிமினல் சட்டத்தின்படி, மாணவனின் பெயரையும் அதிகாரி தெரிவிக்கவில்லை
0 கருத்துகள்:
Post a Comment