உலகப்
பொருளாதார அமைப்பு ஜனவரி 23 முதல் 27 வரை சுவிட்சர்லாந்தில் உள்ள டேவோசில் உலக
சுகாதாரப் பிரச்னைகள் குறித்து குளிர்காலக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டு
இருப்பதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஐ.நா. பொதுச்செயலாளர் பானி கீ மூனும் உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம்மும்
வேறு பல நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்களும் சுகாதார நிறுவனங்களின் தலைவர்களும்
"நெகிழ்திறன் சுறுசுறுப்பு" என்ற தலைப்பில் கூடிப் பேசப்போவதாக உலக சுகாதார அமைப்பு
வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது. வருங்காலத்தில் நிரந்தரமாகப் பின்பற்றப்பட வேண்டிய தேசிய சுகாதார முறைகள் பணித்தள சுகாதாரச் சிறப்பு மற்றும் தனிநபர் சுகாதாரம் போன்ற விடயங்களே இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அமைப்பாளர்களின் கருத்துப்படி இதுவரை சுகாதாரப் பிரச்னைகளைக் களைய குறுகிய கால அளவிற்குத் தான் திட்டமிட்டிருக்கிறோம். நிரந்தரமான தீர்வுக்குரிய முயற்சிகள் பெரிதும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே நாடுகள் தத்தம் தனி ஆணவத்தைத் தகர்த்துவிட்டு உயர்தர சுகாதார சேவையை வழங்க துணிச்சலான மாற்றங்களைக் கொண்டுவர முயல வேண்டும் என்றனர். இப்போது நடைமுறையில் உள்ள சுகாதார முறைகள் குறித்தும், பணித்தளங்களில் இருக்க வேண்டிய சுகாதாரம் குறித்தும் ஓர் அறிக்கை தயாரிக்கவும் உலகப் பொருளாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த அறிக்கை 125 நாடுகளைச் சேர்ந்த இரண்டு மில்லியன் பணியாளர்களுக்கும் அதிகமானவர்களிடம் ஆய்வு நடத்திய பின்பு அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் வெளியிடப்படும் |
0 கருத்துகள்:
Post a Comment