எல்லோரும் எனக்குப் பதவி கிடைத்ததற்காகப் பாராட்டி மகிழ்கிறீர்கள். ஆனால் எனது தாயார் அதை நினைத்து எனது அருகே அமர்ந்து அழுதார்.
பதவியானது விஷம் என்பது அவருக்குத் தெரியும் என்று ராகுல் காந்தி பேசியபோது காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.
ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தின் 2வது நாள் இறுதியில் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். நேற்று நடந்த 3வது நாள் கூட்டத்தில் அவர் துணைத் தலைவராக உரையாற்றினார்.
ராகுல் காந்தியின் பேச்சு முழுக்க உணர்ச்சிகரமாக இருந்தது. குறிப்பாக தனது பாட்டி இந்திரா காந்தி குறித்தும், தாயார் சோனியா காந்தி குறித்தும் அவர் பேசியது உணர்ச்சிகரமாக இருந்தது
{புகைபடங்கள்}
0 கருத்துகள்:
Post a Comment