சென்னையைச் சேர்ந்த மதன் என்பவரும் அவரது நண்பர்களும் பொங்கல் கொண்டாட கோவா சென்றனர்.
கோவாவில் பொங்கல் கொண்டாடி விட்டு நேற்றிரவு கிளப் ஒன்றிற்கு சென்றிருக்கிறார்.
அங்கு டிஸ்கோ நடனம் பார்த்த போது மதன் நண்பர்களுக்கு வேறொரு தரப்பினருக்குமிடையே மோதல் உண்டானது.
இந்த மோதலில் மதனை குறித்த தரப்பினர் கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.
இந்த கத்தி குத்தில் மதனுடன் சென்ற நண்பர்கள் இருவர் படுகாயமடைந்ததுடன் அவர்களது பணம் மற்றும் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தால் கோவாவில் சற்று பதற்றம் காணப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் சுற்றுலாஸ்தளங்களுக்கு பெயர்போன ஊர் கோவா.
வெளிநாட்டு பயணிகள் உட்பட ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்ற நிலையில் இந்த படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment