தர்மபுரியில், ஊர்காவல் படை பெண் பொலிசை மானபங்கப்படுத்திய வாலிபரை பொலிசார் கைது செய்தனர்.
தர்மபுரியை அடுத்த பங்குநத்தத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் திலகவதி, 27. இவர் தர்மபுரி ஊர்காவல் படை பெண் பொலிசாக பணிபுரிகிறார்.
இவர் நேற்று முன்தினம், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பிரசவ வார்டுக்குள் வாலிபர் ஒருவர் செல்ல முயன்றார்.
அவரிடம் திலகவதி பிரசவ வார்டுக்குள் ஆண்களுக்கு அனுமதியில்லை என கூறி தடுத்தார். ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், திலகவதியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரின் சட்டையை பிடித்து இழுத்து மனபங்கம் செய்துள்ளார்.
அவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பிடித்து, தர்மபுரி டவுன் பொலிசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் தர்மபுரியை அடுத்த மல்லிக்குட்டையை சேர்ந்த சபரி, 23, என்பதும், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உறவினர் ஒருவரை பார்க்க வந்தும் தெரியவந்தது. சபரியை போலீஸார் கைது செய்தனர்
0 கருத்துகள்:
Post a Comment